தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டாம் என, சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கத்தில், திமுக வழக்கறிஞர் புருஷோத்தமன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கிகாரம் வழங்கியது திமுக ஆட்சியில்தான் என்று பெருமிதம் தெரிவித்தார். பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள் என்றும் அப்படி கேட்க வைத்திருப்பதுதான் திராவிடம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வந்துவிட்டதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டு ஆளுநரை மாற்றி விட வேண்டாம் என்றும், நாடாளுமன்ற தேர்தல் வரையிலாவது இருக்கட்டும் என்றும் கிண்டலடித்தார்.