18 அம்ச கோரிக்கை: 3வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம்...!

18 அம்ச கோரிக்கை: 3வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம்...!
Published on
Updated on
1 min read

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூய்மை பணியாளர்கள் போராட்டம்:

கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், காப்பீடு பி.எப்., இ.எஸ்.ஐயை முறைப்படுத்த வேண்டும், 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

பாதுகாப்பு பணியில் போலீசார்:
 
முன்னதாக நேற்று மாவட்ட ஆட்சியர் சமீரனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com