மெரினாவில் போராட்டம் நடத்த மாணவர் முடிவா? - தமிழக காவல்துறை எச்சரிக்கை...

மெரினாவில் போராட்டம் நடத்த மாணவர் முடிவா? - கடற்கரைக்கு வந்தால் நடவடிக்கை என காவல்துறை எச்சரிக்கை
மெரினாவில் போராட்டம் நடத்த மாணவர் முடிவா? - தமிழக காவல்துறை எச்சரிக்கை...
Published on
Updated on
1 min read

ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி மெரினாவில் போராட்டம் நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த வலியுறுத்தி சென்னை உட்பட பல்வேறு கல்லுரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக் கோரி, வரும் திங்கட்கிழமை மெரினாவில் காலை 9 மணியளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத் தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த பொய்யான வதந்திகளை நம்பி மாணவர்கள் யாரும் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம் என்றும், மீறி மெரினாவுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com