தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும்..சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும்..சபாநாயகர் அப்பாவு
Published on
Updated on
1 min read

சென்னை கலைவாணர் அரங்கில் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆளுநர் பாராட்டினார்.

இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக ஜனவரி 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாளையும், நாளை மறுநாளும் சட்டமன்றத்தில் கேள்வி-நேரம் மட்டும் நேரலையாக ஒளிபரப்படும் என்று குறிப்பிட்ட சபாநாயகர், சட்டப்பேரவையின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலை செய்வதே அரசின் நோக்கம் என கூறினார். மேலும், முதலமைச்சர் பதிலுரையும் நேரலை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com