காலில் தடம் பதிவும் அளவிற்கு 4ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர்!!

வீட்டுப்பாடம் எழுதாததால் 4ஆம் வகுப்பு மாணவியை கம்பால் தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
காலில் தடம் பதிவும் அளவிற்கு 4ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர்!!
Published on
Updated on
1 min read

சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், ஐ.டி ஊழியர் சத்யா என்பவரின் மகள் கீர்த்தனா 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் பாடத்தில் வீட்டு பாடம் எழுதாததால், ஆசிரியை பார்வதி மாணவியை கம்பால் காலில் தடம் பதிவும் அளவிற்கு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கிறுமிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு முதலுதவி சிகிச்சை  கூட பள்ளியில் அளிக்காமல் குழந்தை கீர்த்தனா-வை மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம்  வகுப்பு ஆசிரியர் தன்னை பயங்கரமாக அடித்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உடனடியாக இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்காததால் பள்ளியின்  ஆங்கில வகுப்பு ஆசிரியர் பார்வதி என்பவர் மீது  தந்தை சத்யா கொரட்டூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com