சுபஸ்ரீ மரணத்தில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்...உறுதியளித்த முதலமைச்சர்...!

சுபஸ்ரீ மரணத்தில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்...உறுதியளித்த முதலமைச்சர்...!
Published on
Updated on
1 min read

கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த திருப்பூரை சேர்ந்த சுபஸ்ரீ மரணத்தில் உண்மை கண்டறியப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

கேள்வி :

சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி ராமசந்திரன், ஈஷா யோகா மையத்தில் நடந்த சுபஸ்ரீ மரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

பதில் :

அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், ஈஷா யோகா மையத்துக்குச் சென்ற சுபஸ்ரீ மாயமானதை அறிந்து கடந்த 19ம் தேதி பெறப்பட்ட புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், உடல் கண்டறியப்பட்டவுடன் கோவை மருத்துவ கல்லூரியில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஈஷா யோகா மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை மேற்கொண்டு கைபேசிகள் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய முதலமைச்சர், சுபஸ்ரீ மரணத்தில் உண்மை கண்டறியப்படும் என்றும் உறுதியளித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com