
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மனைவி காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த கணவன் மாமியார் மாமனார் உள்ளிட்டோர் பெண்ணிற்கு எறும்பு சாக்பீஸை தண்ணீரில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி தப்பி வந்த பெண் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் கட்டிட தொழிலாளி இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தனது மூத்த மகளான பாரத லட்சுமியை கடந்த 15 மாதங்களுக்கு முன்பு முன்பு குளத்தூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் அய்யனாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணத்திற்காக முருகன் தனது மகளுக்கு 10 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் ரூபாய் 2 லட்சம் ரொக்க பணம் மேலும் மருமகன் அய்யனாருக்கு ஒரு பவுனில் தங்க செயின் மற்றும் அரைப்பவுனில் தங்க மோதிரம் சீதனமாக அளித்துள்ளனர்
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கூடுதலாக 10 பவுன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கம் கேட்டு கணவர் அய்யனார் மாமியார் முனீஸ்வரி மாமனார் கணேசன் தாய்மாமா கோட்டைச்சாமி ஆகியோர் பாரத லட்சுமியை கொடுமைப்படுத்த துவங்கியுள்ளனர் அவருக்கு எந்த பொருளும் வாங்கிக் கொடுக்காமல் உணவும் முறையாக கொடுக்காமல் அய்யனார் இரவில் தூங்கவிடாமல் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்
இந்த வரதட்சணை கொடுமை தொடர்பாக பாரத லட்சுமி தனது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார் இதைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் சமரசம் செய்து வைத்துள்ளனர்
ஆனால் மாமியார் முனீஸ்வரி மற்றும் மாமனார் கணேசன் ஆகியோர் பாரத லட்சுமி இடம் நீ உன் வீட்டிற்கு சென்று விடு நாங்கள் உன் கணவன் அய்யனாருக்கு கூடுதலாக நகை போட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துக் கொள்கிறோம் என கூறி டார்ச்சர் செய்துள்ளனர் இதைத்தொடர்ந்து வேறு திருமணம் செய்ய ஐய்யனார் வீட்டில் பெண் பார்க்க துவங்கியுள்ளனர்
மேலும் அய்யனார் தனது மனைவி பாரத லட்சுமியிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் பாரத லட்சுமி தனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தனது தாய் வீட்டில் சிறிது காலம் வசித்து வந்துள்ளார்
இதைத்தொடர்ந்து அய்யனாருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய பார்ப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து கணவர் அய்யனார் மற்றும் மாமியார் முனீஸ்வரி மாமனார் கணேசன் அய்யனாரின் தாய் மாமா கோட்டைச்சாமி ஆகியோர் மீது கடந்த 19ஆம் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரத லட்சுமி வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புகார் அளித்துள்ளார்
இதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த அய்யனார் மற்றும் அவரது தாய் தந்தை உறவினர்கள் இனிமேல் அய்யனார் தனது மனைவியுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துவார் இந்த புகாரில் வேறு வழக்கு எதுவும் பதிய வேண்டாம் நாங்கள் வெளியே வைத்து பேசி தீர்த்துக் கொள்கிறோம் என கூறி சென்றுள்ளனர்
இதை நம்பி முருகன் தனது மகள் பாரத லட்சுமி கணவன் அய்யனார் மற்றும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்துள்ளார் ஆனால் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அய்யனார் மற்றும் அவரது தாய் முனிஸ்வரி தந்தை கணேசன் தாய் மாமா கோட்டைச்சாமி ஆகியோர் கடந்த இருபதாம் தேதி இரவு பாரத லட்சுமியை எங்கள் மீதா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறாய் உன்னை என்ன செய்கிறோம் என்று பார் எனக் கூறி விஷத்தன்மையுடைய எறும்பு சாக்பீஸை தண்ணீரில் கலந்து அதை நான்கு பேரும் பாரத லட்சுமியைப் பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அவரது வாயில் ஊற்றி கொல்ல முயன்றுள்ளனர் இதில் நான்கு பேரிடமும் இருந்து தப்பித்த பாரத லட்சுமி வீட்டிற்கு வெளியே வந்து தனது தந்தைக்கு போன் போட்டு தகவல் தெரிவித்துள்ளார்
இதைத்தொடர்ந்து அங்கே வந்த பாரத லட்சுமியின் உறவினர்கள் உடனடியாக அவரை குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் தற்போது பாரத லட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது மகள் பாரதலட்சுமியை விஷம் கலந்த தண்ணீரை கொடுத்து கொலை செய்ய முயன்ற கணவர் அய்யனார் மாமியார் முனீஸ்வரி மாமனார் கணேசன் மற்றும் தாய் மாமா கோட்டைச்சாமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமென குளத்தூர் காவல் நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்
ஆனால் காவல்துறையினர் இதுவரை தனது மகள் பாரத லட்சுமியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற கணவர் அய்யனார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் எனவே காவல் துறையினர் நான்கு பேரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.