அன்பு தான் சார் எல்லாமே....அடிபட்ட குரங்கிற்கு கடவுளாய் மாறிய நபர்!

அன்பு தான் சார் எல்லாமே....அடிபட்ட குரங்கிற்கு கடவுளாய் மாறிய நபர்!

காயமடைந்த குரங்கிற்கு ஒருவர் தண்ணீர் கொடுத்து உதவும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
Published on

காயமடைந்த குரங்கிற்கு ஒருவர் தண்ணீர் கொடுத்து உதவும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம், அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே அடிபட்ட குரங்கிற்க்கு தண்ணீர் கொடுத்து உதவும் வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

 இன்று காலை குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், அந்த வழியாக வாகனம் ஓட்டி வந்த பிரபு என்பவர் குரங்கைத் தூக்கி கொண்டு வந்து தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை செய்யும் வீடியோ  சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மேலும் பல்வேறு நபர்களும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இதுபோன்று குரங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க வனப்பகுதிகளில் உள்ள இடங்களில் குரங்கு  காப்பகம் அமைக்க வேண்டும் என்றும் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com