இத பத்தி சட்டசபையில் பேசுங்கள் எம்எல்ஏவிற்கு ஐடியா கொடுத்த கிராம மக்கள்

இத பத்தி சட்டசபையில் பேசுங்கள் எம்எல்ஏவிற்கு ஐடியா கொடுத்த கிராம மக்கள்
Published on
Updated on
1 min read

உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர்கள் திறப்பு

கமுதக்குடி கிராமத்திற்கு ரயில்வே சுரங்கப்பாதை அனைத்து தருவது குறித்து சட்டசபையில் பேச வேண்டுமென எம்எல்ஏவிற்கு கிராம மக்கள் ஐடியா கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரம், கமுதக்குடி ஆகிய இரு கிராமங்களில் ரூபாய் 14 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர்களை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் இன்று திறந்து வைத்தார்.

அப்போது கமுதக்குடி கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை இல்லாததால் நான்கு கிலோமீட்டர் சுற்றி ஊருக்குள் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை மன அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கமுதக்குடியில் டிரான்ஸ்பார்மர் திறப்பு விழாவிற்கு வந்த எம்எல்ஏவை சூழ்ந்த பெண்கள் சுரங்கப்பாதை பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும்.

முதல்வரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என எம்எல்ஏவிற்கு ஐடியா கொடுத்தனர். இந்நிகழ்வில் கமுதக்குடி ஊராட்சி மன்ற தலைவி கவிதா மோகன், சோமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவி சுமதி பாலசுப்ரமணியன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com