மரத்தின் மீது ஏறி  உதயநிதி உரையை மெய்மறந்து கேட்டு ரசித்த இளைஞர்கள்...

மரத்தின் மீது ஏறி உதயநிதி உரையை மெய்மறந்து கேட்டு ரசித்த இளைஞர்கள்...

Published on

இந்தி திணிப்புக்கு எதிராக  திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர் அணியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் எங்கு என்றாலும் அவருக்கு இளைஞர் அணி பட்டாளம் வரவேற்பு தடபுடலாகவே அமையும். இன்று நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திலும்  இளைஞர் அணி பட்டாளம் உதயநிதியை மேளதாளத்துடன் கூக்குரல் எழுப்பி விசில் அடித்து வரவேற்றனர்.

மேலும் அவர் உரையாற்றும் பொழுது ஒரு படி மேலே சென்று மரத்தின்  உச்சியின் மீது ஏறி மெய்மறந்து உரையை கண்டு ரசித்தனர்.

உதயநிதி ஸ்டாலின் உரையை கேட்பதில் இருந்த ஆர்வம் மாநில கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் உயிர் மீது அக்கறை இல்லாமல் போனதையே இது உணர்த்துகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com