கார் மீது இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்...வெளியான சிசிடிவி காட்சிகள்..!

கார் மீது இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்...வெளியான சிசிடிவி காட்சிகள்..!

வேடசந்தூர் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்று இரவு ஆம்னி காரில் தனது குழந்தைகளுடன் திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள ஒரு கேஸ் பங்கில் தனது காருக்கு கேஸ் ஏற்றுவதற்காக சென்று உள்ளார்.

கார் மீது பைக் மோதி விபத்து:

பின்னர், கேசை ஏற்றிவிட்டு பங்கில் இருந்து வெளியே வந்த கார் சாலையை கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியாக வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் எதிர்பாராத விதமாக அந்த கார் மீது மோதி விபத்துக்களானது.

இளைஞர் படும்காயம்:

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து பங்கு ஊழியர்கள் உடனடியாக 108 வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த 108 வாகனம் படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

போலீசார் வழக்கு பதிவு:

இந்த விபத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த விபத்து குறித்த நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com