பிரசவ வார்டில் தரையில் படுத்து அவதிப்படும் தாய், சேய்...என்ன காரணம்?

பிரசவ வார்டில் தரையில் படுத்து அவதிப்படும் தாய், சேய்...என்ன காரணம்?
Published on
Updated on
1 min read

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டில் படுக்கைகள் வழங்கபடாததால் பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் தரையில் படுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

அலட்சியத்துடன் செயல்படும் மருத்துவமனை:

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக சிகிச்சை அளிப்பதிலும், நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதிலும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பிரசவ வார்டில் படுக்கை இல்லாமல் அவதி:

இதன் ஒரு பகுதியாக நெல்லை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில், பிரசவம் முடிந்த பெண்களுக்கு படுக்கைகள் வழங்கபடாததால் பச்சிளம் குழந்தையுடன் அவர்கள் தரையில் படுத்து கிடக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்களும் வலியுடன் தரையில் படுத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

சமூக ஆர்வலர்கள் அச்சம்:

பிரசவ நேரத்தில் பெண்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படும் என்பதாலேயே அவர்கள் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருகின்றனர். ஆனால், நெல்லை மருத்துவமனையில் தற்போது தாயும் சேயும் தரையில் படுப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com