
அம்பத்தூர் தொகுதியில் பொது மருத்துவமனை அமைக்க தற்போது அவசியம் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அம்பத்தூர் தொகுதியில் பொது மருத்துவமனை அமைக்க அரசு முன்வருமா என
கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திரபாபு?
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அம்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் 57 படுக்கை வசதிகளுடன் கொண்ட ஆவடி மருத்துவமனை உள்ளது எனவும், 13 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. எனவே, அம்பத்தூர் தொகுதியில் பொது மருத்துவமனை அமைக்க தற்போது அவசியம் இல்லை என்றார்.