திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்துப் பேசிய முதலமைச்சர் ஒரு கோடியே 11 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்று வருவதாக கூறினார். கருணாநிதி நூற்றாண்டு விழாவைப் போல் இந்தியாவில் வேறு எந்த விழாவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். நேற்று நடைபெற்ற நாணய வெளியீட்டு மகிழ்ச்ச்சியில் தனக்கு தூக்கம் வரவில்லை என்றார்.
ஜெயலலிதாவிற்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட அதிமுகவினர் நடத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். நாணய வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், அவருக்கு மண்டையில் மூளையாவது இருக்க வேண்டும் என்றும் அவருக்கு எந்த அரசியல் அறிவும் இல்லை என்று சாடினார். கருணாநிதி நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தியதால் தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதாக விளக்கமளித்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி குறித்து உள்ளத்தில் இருந்து பேசியுள்ளதாக தெரிவித்தார்.