
இந்நிலையில் மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்ற மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தது.. மின்சாரவாரியத்தில் பணிபுரியும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக” மின்சார வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளது.