“அன்புமணி நடத்தும் பொதுக்குழுவிற்கு தடையில்லை..” நீதிபதியின் பேச்சு வார்த்தையால் சமரசமான ராமதாஸ்!!

பொதுக்குழு கூட்டம் உள்ளரங்கில் நடைபெறுவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே தலையிடப்படும் என்றும் காவல்துறை தரப்பில் ...
ramadoss and justice anand venkatesh  pc: one inidia tamil
ramadoss and justice anand venkatesh
Published on
Updated on
1 min read

அன்புமணி தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி தலைமையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நிறுவனர் ராமதாஸால் நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்த போது, ராமதாஸ் மற்றும் அன்புமணியை தனது அறையில் தனியாக சந்தித்து பேச விரும்புவதாக கூறி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இருவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்று அன்புமணி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறைக்கு நேரில் வந்திருந்தார். ராமதாஸ் காணொளி மூலமாக நீதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை அரை மணி நேரம் நடைபெற்றது.

பின்னர் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில்  விசாரணை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் முரளி சங்கர் தரப்பில், பொதுக்குழுவை கூட்ட கட்சி நிறுவனருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் அன்புமணி கூட்டி உள்ள பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது என்றும் வாதிடப்பட்டது.

அன்புமணி தரப்பில், கட்சி சட்ட விதிப்படி பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது. கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு மட்டுமே பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது. நிறுவனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நிறுவனர் ராமதாஸுக்கு நேரடியாகவும் கடிதம் மூலமும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டம் உள்ளரங்கில் நடைபெறுவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே தலையிடப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com