மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர அவசரமாய் கடிதம் எழுதிய இறையன்பு...எதற்காக தெரியுமா?

மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர அவசரமாய் கடிதம் எழுதிய இறையன்பு...எதற்காக தெரியுமா?
Published on
Updated on
1 min read

குடியரசு தினவிழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

கோலாகல கொண்டாட்டம் :

குடியரசு தின விழா வருகிற ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.  அந்தவகையில், தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது. தற்போது இதற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

இறையன்பு கடிதம் :

இந்நிலையில் குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்தல், குடியரசு தின விழாவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, கிராம சபை கூட்டங்களில் எவ்வித சாதிய பாகுபாடும் இருக்கக் கூடாது உள்ளிட்ட 15 விதமான அறிவுறுத்தல்களை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com