மின் கட்டண உயர்வு விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த பின்பு ஓசூர் தொழில் முனைவோர் சங்க தலைவர் நம்பிக்கை தொிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, ஓசூர் சிறு குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மூர்த்தி, நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தார்.