அதிமுக - பாஜக கூட்டணியின் பலவீனம் விஜய்க்கு பலம்…! 2026 தேர்தலில் இவங்கதான்! - அடித்து சொல்லும் பிரியன்…!

“திமுக -வின் வெற்றி வாய்ப்பு.. விஜய் எடுத்து வைக்கும் நகர்வுகளை பொறுத்தது...
tvk vijay
tvk vijay
Published on
Updated on
2 min read

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது.  இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது. 

அதிமுக - பாஜக கூட்டணியின் பலவீனம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வந்தாலும் திருபுவனம் அஜித் குமார் மரணத்தை தொடர்ந்து பாஜக-அதிமுக கூட்டணி வெளிப்படையாக தங்களின் ஒற்றுமையை நிரூபித்துள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் பல முரண்களை தற்போது வெளிப்படையாக பார்க்க முடிகிறது. சமீபத்தில் கூட திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் செயலாளர் பெ.சண்முகம் “திமுக -வின் வெற்றி வாய்ப்பு.. விஜய் எடுத்து வைக்கும் நகர்வுகளை பொறுத்தது” என பேசியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் நிலவும் சர்ச்சை பொது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால் தமிழக வெற்றி கழகம் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே பல அரசியல் விமர்சகர்கள் விஜய் கணிசமான வாக்குகளை சிதைப்பார் எனக்கூறப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக விஜய் மறுக்க முடியாத ஒரு மாற்று சக்தியாக வளர்கிறார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் விஜய் - ன் வருகை அனைவருக்கும் ஆபத்தான ஒன்றுதான்.திமுக, அதிமுக -பாஜா கூட்டணி நாம் தமிழர் என அனைவருக்கும் ஆபத்துதான் குறிப்பாக சிறுபான்மையினரின் ஓட்டை பெருமளவு சிதைப்பார் எனக்கூறப்படுகிறது. நேற்றுதான் அதிமுக -பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் பிரிந்து வந்துள்ளார், ஏற்கனவே பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில் விஜய் -உடன் ஓபிஎஸ் இணைவது பற்றி பேசியுள்ளார். மேலும் விஜயின் பிரவேசத்தால் அதிமுக - பாஜக வலுவிழந்துள்ளது என்றும் பேசியிருக்கிறார். ஆகவே உதிரி உதிரியாய் இணைந்துள்ள பலரும் இன்னும் சொல்லப்போனால் திமுக -உடன் இணையாத  அனைவரும் விஜய் -உடன் இணையவே விருப்பம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் பிரியன் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, “விஜய் சில ஆப்ஷன்ஸை திறந்துவிட்டுள்ளார். 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தபோது ஆட்சியில் பங்கு என்ற வார்த்தையே வரவில்லை. விஜய் பேசிய பிறகுதான் இந்த கதவுகள் எல்லாம் திறக்கின்றன. இதுவரை வந்த நடிகர்களிலேயே விஜய் தான் தெளிவான கொள்கையோடு அரசியலுக்கு வந்துள்ளார். திராவிடம் தமிழ் தேசியம் என்பதில் தெளிவோடு இருக்கிறார்.ஆகவே அதிமுக, திமுக, பாஜக -விற்கு எதிரான அனைத்து ஓடுகளும் விஜய்க்கு செல்லும் வாய்ப்பு அதிகம்" என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com