“யார் அந்த தம்பி?” - “ஞானம் கிடையாது.. கெட்ட பெயரே அவர்களால் தான்!” நாதகவினரை விளாசிய திருமாவளவன்!

"கீழே ஒருவன் கூட ஞானம் உள்ளவர்கள் இல்லை.. சாதியவாதிகளும் மதவெறியர்களும் தான் இருக்கிறார்கள்"
Thirumavalavan about NTK
Published on: 
Updated on: 
1 min read

நேற்று திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடந்த எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்  மற்றும் அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் உரையாற்றினார்கள்.

அதில் திருமாவளவன் பேசியதாவது, பாமகவும் பாஜகவும் இடம் பெறுகிற அணியில் இருக்க மாட்டோம் என 15 ஆண்டுகளாக திரும்ப திரும்ப சொல்லி வருகிறோம். இப்படி சொல்வதால் பாமகவுக்கு நல்லது ஒன்று நடக்கிறது. நாம் இப்படி சொல்வதால் பாமக, வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைக்கிறது. வன்னியர்கள் யாரும் விசிக இருக்கும் அணிக்கு ஓட்டு போட மாட்டார்கள். விசிகவினர் யாரும் பாமக இடம் பெறும் அணிக்கு ஓட்டு போடமாட்டார்கள். இது வெளிப்படையாக நடக்கும் அரசியல். நாம் வாக்குகளை திரட்ட சொல்லவில்லை. கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் சொல்கிறோம். 

தொடர்ந்து பேசிய அவர் விடுதலைச் சிறுத்தைகள் தமிழ் தேசியம் பேசுகிறது இது திரிபுவாத கும்பலுக்கு பிடிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியில் ஒரு நபர்.. என்று குறிப்பிட்ட அவர் நண்பர் சீமான் இல்லை அவர் நாகரீகமாக தான், பேசுகிறார். அவருக்கு கீழே ஒருவன் கூட ஞானம் உள்ளவர்கள் இல்லை.. சாதியவாதிகளும் மதவெறியர்களும் தான் இருக்கிறார்கள். அரசியல் முதிர்ச்சி உள்ளவர்கள் கிடையாது பக்குவம் உள்ளவர்கள் கிடையாது. அவருக்கு கெட்ட பெயரே அந்த கும்பலால் தான் என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை விமர்சித்துள்ளார்.

மேலும் 100 விழுக்காடு சாதிவெறியர்களும் மதவெறியர்களும், அந்த கட்சியை ஆக்கிரமித்து கொண்டு, அதை தெலுங்குக்கு எதிரான கட்சியாக மாற்றி விட்டார்கள். தெலுங்கு எதிர்ப்புதான் தமிழ் தேசியம் என்று திரிபுவாதம் செய்கிறார்கள் வேண்டும் தமிழ் தேசியம் என்றால் இரண்டு அணுகு முறையில் பார்க்கலாம்  என்று குறிப்பிட்ட திருமாவளவன் ஒன்று தமிழரசன் பார்வை, இன்னொன்று பிரபாகரன் பார்வை என குறிப்பிட்டார்.

சமீபத்தில்  சாட்டை துரைமுருகன், திருமாவளவன் முதல்வர் எனும் கருத்த குறித்து விமர்சனம் செய்திருந்தார். மேலும் திமுக உடனான கூட்டணியையும் தற்போது தவெக உடனான கூட்டணி குறித்து கடுமையாக சாடியிருந்தார். மேலும் 2 சீட் என்றும் பகடி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com