தடம் புரண்ட சரக்கு ரயில் - ஜல்லி கற்களில் ஓடி நின்றதால் பரபரப்பு

திருவாரூரில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டு ரயில் பாதையை விட்டு கீழே இறங்கி ஜல்லி கற்களில் சிறிது தூரம் ஓடி நின்றதால் பரபரப்பு.
goods train
goods train
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் பேரளம், மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாதை அமைப்பதற்காக திருவாரூரில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு 12 பெட்டிகளுடன் சரக்கு ரயில் ஒன்று பேரளம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ரயில் இன்ஜினில் பின் பக்க ஆறு சக்கரங்கள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி ஜல்லி கற்களில் சிறிது தூரம் ஓடி நின்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து தடம் புரண்ட ரயில் இன்ஜினை கழற்றி பெட்டிகளை மாற்று எஞ்சின் மூலம் பேரளம் காரைக்கால் ரயில் பாதை நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தடம் புரண்ட ரயில் இன்ஜினை மீட்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருவாரூருக்கு வர வேண்டிய ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com