

‘India has two language, one is Cinema another one is Cricket’ ஆம் இந்திய அரசியல் நிலப்பரப்பில் திரைத்துறை கோலோச்சிய விதம் அளப்பரியது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் கடந்த 75 ஆண்டுகால அரசியல் வரலாறு திரைத்துறையினர் சார்ந்தே இருக்கிறது.
எம்.ஜி.ஆர் அரசியலில் பிரவேசித்தபோது ஏற்பட்ட எழுச்சி இன்று விஜய் அரசியலில் நுழைந்தும் கொஞ்சம் கூட குறையாமல் நிலைபெற்று உள்ளது.
அதற்கு கரணம் தமிழக மக்கள் சினிமாவையும் சினிமா காரர்களையும் கொண்டாடி தீர்க்கும் விதம் தான். ஆனால் இந்த விஷயம் நாணயத்தின் இருப்பக்கத்தை போல எந்த அளவுக்கு பெரும் வரவேற்பும் ஏகோபித்த ஆதரவும் கிடைக்கிறதோ அதே அளவுக்கு மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு நட்சத்திரங்களை காண திரண்டு மரணித்த மக்கள் எம்,ஜி.ஆர், ஜெயலலிதா, காலம் தொட்டு இன்றளவும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. பெரியார் போன்ற முற்போக்கான தலைவர்கள் வாழ்ந்த மண்ணில் மக்கள் ஏதோ ஒரு மோகத்தால் கொத்து கொத்தாக மடிவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இதனை கண்டித்து சமகால தலைவர்கள் திரைப்பிரபலங்கள், என அனைவரும் பேசியுள்ளனர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து பல மேடைகளில் பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் நடத்திய மரங்களின் மாநாட்டில் கூட “சாதி, மத, இன, மது போதைக்கு இணையானது சினிமா மோகம்” என பேசியிருந்தார்.
இதுகுறித்து மதுரையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது தமிழ் சமூகம் எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை. கல்வி வியாபாரமாக மாறியதால் கல்வியில் அரசியல் கற்பிக்கப்படவில்லை. கலையை போற்றலாம், கலைஞர்களை கொண்டாடலாம். நடித்தாலே போதும் நாட்டை ஆளக்கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது தகுதி வந்துவிடுகிறது என்று நாட்டு மக்கள் கருதுவார்களானால், அது ரொம்ப கொடுமையான போக்காக மாறிவிடும்.
அதனை வருங்கால தலைமுறை அறிவார்ந்த சமூகமாக உருவாகும் என நிக்கும்போது தற்போதைய நிலை கண்டு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு? நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு, என்கிற கோட்பாடு, நிலைப்பாடு உலகத்திற்கே அறிவை கடன் கொடுத்த தமிழ் சமூகம் இச்செயல்களை ஏற்கிறதா?
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சினிமா உள்ளது. திரை கவர்ச்சி ஆனால் எந்த ஒரு மாநிலத்தில் நிகழாத விபத்து தமிழகத்தில் நடக்கிறது ஏன் ? திரை கவர்ச்சிகளில் மூழ்கி கிடக்கும் தமிழ் இனம் விழிப்புற்று ஏழ வேண்டும். அரசியல் என்பது வாழ்வியல், முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி படித்து தெரிந்து கொள்ளாவிட்டால் பெரும் சிக்கல் ஆகிவிடும். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து ஆறுதல் கூறுவது விஜயின் விருப்பம். அதில் நாம் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு சீமான் கூறினார்.
ஒரு வேலையை செய்ய அதற்கான அறிவையும், தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அரசியலுக்கு எதுவேமே தேவை இல்லை , நிர்வாகத்திறமை வேண்டாம், கடந்த கால வரலாறு தெரிய வேண்டாம், உலக நடப்பு குறித்த ஆழ்ந்த பார்வை வேண்டாம் நடிகராக இருந்தால் மட்டும் போதும் என்ற போக்கு எப்படி உருவானது என்பதுதான் மிகப்பெரும் கேள்வி.
இதே சினிமாத்துறையை சேர்ந்த வெற்றி மாறன் தனது விடுதலை படத்தில், “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள்” என ஒரு வசனம் வைத்திருப்பார். இன்றைய தமிழக அரசியல் சூழலும் அவ்வாறே உள்ளது.
சினிமா மோகம் குறித்து எம்.ஆர். ராதா அப்போதே நல்லவன் வாழ்வான் படத்தில், “எலெக்சன்லே.. யார் வேணும்னாலும் நின்னுடுறாங்க.. அதுக்குத் தகுந்த யோக்கிதை இருக்கா. நாணயம் இருக்கா? பொறுப்பு இருக்கா? ஒண்ணும் கவனிக்கிறதில்லே’’ என பேசியிருப்பார். ஆனால் சமகாலத்தில் அது மிகவும் பொருத்தமாக அமைந்து உள்ளது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கே அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள எந்த ஒரு தனிமனிதனுக்கும் உரிமை உண்டு.. ஆனால், நம் பின்னல் பலலட்சக்கணக்கான ரசிகர்கள் திரளும், அவர்களின் வாழ்வியலையும், உயிரையும், அரசியல் புரிதலையும் பாதுகாப்பது அந்தந்த இயக்கத்தலைவனின் தலையாய பொறுப்பு.
சீமான் பேசிய கருத்துக்கள்சமகாலத்தோடு ஒத்திசைபவை , அவற்றை யார் பேசியிருந்தாலும் வரவேற்கவேண்டியதும், அதுகுறித்து சிந்திக்க வேண்டியதும் தமிழ்சமுகத்தின் பொறுப்பு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.