2026 தேர்தல்; அதிமுக வுக்கு வாழ்வா சாவா தேர்தல்!? எடப்பாடி தோல்வியை விரும்புவது இவரா!? மணி சொல்வதென்ன..!

'மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை ...
eps vs mkstalin
eps vs mkstalin
Published on
Updated on
1 min read

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது.  இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது. 

தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதன் முதற்கட்டமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனத்துடன்கடந்த 8 -ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். 

அண்ணாமலையின் ஆத்திரம் 

இந்த சுற்று பயணம் குறித்து தனியார் யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “இதாய் ஏற்கனவே ஸ்டாலினும் செய்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு நாமே சுற்றுப்பயணம் அவருக்கு நல்ல வரவேற்பை  தந்தது. அதையே நம்பி எடப்பிடியும் அதனை மேற்கொண்டிருக்கிறார். பெரிதாக ஒன்றும் அவர் நடந்து சென்று மக்களை சந்திக்கவில்லை. சொகுசு பேருந்தில் அமர்ந்தே செல்கிறார். நயினார் நாகேந்திரன் எடப்பாடியை சந்தித்தார். ஆனால் அண்ணாமலை வரவில்லை. யார் வரவில்லை என்பதை தான் கவனிக்க வேண்டும். எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கு என்ன பிரச்சனை என்பது நமக்கு நன்கு தெரியும். திமுக எடபடியின் தோல்வியை விரும்புவதை விட அண்ணாமலையே அதிகம் விருப்புகிறார் என்பதே உண்மை. ஜெயலலிதா மரணத்திலிருந்து எடபடிக்கு தொடர்ந்து தோல்வி முகம்தான். எடப்பாடி இந்த தேர்தலை வென்றால் மட்டுமே அவரை காப்பற்றிக்கொள்ள முடியும். இல்லையெனில் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும். தொடர்ந்து தேமுதிக அதிமுக -வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “தேமுதி கூட்டணியில் வேண்டாம் என்று, அமித்ஷா -வே விரும்புகிறார். ஏனெனில் அவர்களின் ஒட்டு வங்கி மிகக்குறைவு, தேர்தல் சமயத்தில் அவர்களுக்கும் செலவு செய்ய முடியாது என்பதால்,  அவர்களை கழற்றி விடவே பார்க்கின்றனர் என்கிறார், மணி.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com