
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வரவேற்பதாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அறிகை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,..
" பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை தேமுதிக வரவேற்கிறது. இந்த மசோதாவை கொண்டு வர கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்திருப்பது ஒட்டு மொத்த பெண் இனத்திற்கு கிடைத்த வெற்றி.
மேலும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். பெண்கள் நாட்டின் கண்கள். இது பெண் இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.” என தேமுதிக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.