இதுதான் பாசிசம்..! அமீர் விளக்கம்...!! 

இதுதான் பாசிசம்..! அமீர் விளக்கம்...!! 
Published on
Updated on
1 min read

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் செய்தியாளர்களுக்கு பாசிசம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில், தன்னார்வ அமைப்பின் சார்பில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 100 சிசிடிவி கேமராக்கள் அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் அமீர்  கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறிப்பிட்ட சமூகத்தினர் மீது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை பலரும் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள்  மீது அரசு வழக்கு தொடர வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஆனாலும் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை பலரும் பேசி வருகின்றனர். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. இதில் தேசிய கட்சியின் ஆதரவோடு சிலர் தவறான கருத்துக்களை பேசி வருகின்றனர். இத்தகைய செயலை தான் பாசிசம் என்று குறிப்பிட்டேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து, அண்ணாமலை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் கிடையாது. ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டு, சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் எந்த காலத்திலும் தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com