இதுவே மதசார்பற்ற தமிழ்நாடு என்பதற்கான சிறந்த உதாரணம்..!

புளியந்தோப்பில் இஸ்லாமிய மாணவி கந்த சஷ்டி கவசம் பாட 18 படிகளுடன் களைகட்டிய ஐயப்ப கோவில் திருவிழா.
இதுவே மதசார்பற்ற தமிழ்நாடு என்பதற்கான சிறந்த உதாரணம்..!
Published on
Updated on
1 min read

சிறப்பு ஏற்பாடு

சென்னை புளியந்தோப்பு சிவராவ் சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக  ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்தின் நண்பர்கள் குழு சார்பாக நான்காம் ஆண்டு அய்யப்ப மலர் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த மலர் பூஜையின் சிறப்பு அம்சமாக சபரிமலை போல 18 படிகள்  அமைக்கப்பட்டு அதில் மாலை அணிந்தவர்கள் மட்டும் 18 படிகளில் ஏறி மேலே சென்று அய்யப்பனை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அய்யப்பனும் அப்துல் மகளும் 

சபரிமலை போல் சென்னையில் அமைக்கப்பட்ட இந்த அரங்கத்தை காண அந்த பகுதி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் மலர் பூஜையின் சிறப்பு அம்சமாக புளியந்தோப்பைச் சேர்ந்த அப்துல் முஜீத் என்பவரின் மகள் ஹூனா என்பவர் கந்த சஷ்டி கவசம் பாடலை பாடினார், இதனை அனைவரும் ரசித்து கேட்டு சிறுமியை பாராட்டினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com