
தமிழகத்தின் நிதி நிலையை சீர் செய்யும் நோக்கில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை கோசாகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாமினை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளன என்ற அவர், தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் மது கடைகள் திறந்து உள்ளோம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் பாஜக ஆளும் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து உள்ளன என்றும், தமிழகத்தின் நிதி நிலையை கடந்த ஆட்சி மோசமாக விட்டு சென்றுள்ளது. அதை சீர் செய்யும் நோக்கில் மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.