வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணர்வு.. பீதியில் மக்கள்

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் வேலூர் மக்கள் பீதியடைந்துள்ளனர். 
வேலூர் மாவட்டத்தில்  தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணர்வு..  பீதியில் மக்கள்
Published on: 
Updated on: 
1 min read

வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 29-ம் தேதி அதிகாலை 4:17 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாகவும், இந்த நில அதிர்வு வேலூருக்கு தெற்கு - தென்மேற்கில் 59.4 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இதனை தொடர்ந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் நேற்று முன்தினம் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்ட டுவீட்டில், பிற்பகல் 3.14 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக வேலூர், குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com