ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பணியை தொடர தகுதியில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பணியை தொடர தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பணியை தொடர தகுதியில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஊதிய உயர்வு பெற தகுதியில்லை என்றும், 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பணியை தொடர தகுதியில்லை என்றும் உத்தரவிட்டார். 

மேலும், கல்வி உரிமை சட்ட விதிகள் அமல்படுத்தாமல் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை கண்டிப்புடன் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் அப்போது அவர்கள் குறிப்பிட்டார். 

அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே, திறமையாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முடியும் என்றும், தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் எனவும் சென்னை  நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com