"போலி வெளிநாட்டு நிறுவனங்கள் மீது குண்டர் சட்டம்" செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை!

"போலி வெளிநாட்டு நிறுவனங்கள் மீது குண்டர் சட்டம்" செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை!
Published on
Updated on
2 min read

தமிழக பணியாளர்களை பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த 19 பேரை இரண்டு ஆண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் குவைத்திற்கு பணிபுரிய  அமோசா டிராவல்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி சென்ற இவர்களுக்க உணவு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் எனவும்  இந்திய பண மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் என கூறி வேலைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓராண்டு காலம் தொடர்ந்து வேலை செய்து நிலையில் தங்குமிடம் உணவு வழங்கப்படாமல் பணியினை தொடர வேண்டுமானால் விசா புதுப்பிக்க ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என ஏஜென்சியினர் கேட்டுள்ளனர் சம்பளமும் பேசியவாறு வழங்காமல் மிகக் குறைந்த அளவில் வழங்கியுள்ளனர்.

இதனால் குவைத்தில் இருந்து பணியினை தொடர முடியாமல் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்கிறோம் எனக் கூறிய போது பாஸ்போர்ட்டை திருப்பி தர  60000 ரூபாய் தர வேண்டும் என குவைத்தில் பணி வழங்கிய நிறுவனமான பியூச்சர் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனால் தமிழ்நாட்டிற்கும் வர முடியாமல் தமிழக பணியாளர்கள்  தவித்தனர் மேலும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு போதிய பணம் இல்லாமல் சிக்கித் தவித்த நிலையில் இந்திய தூதரகத்தை அணுகி தமிழக அயல்நாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முயற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த 19 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது போன்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஏற்கனவே இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட ஏஜென்சி நிறுவனங்களுக்கு குண்டர் சட்டம் வரை போடப்பட்டுள்ளது என சென்னை விமான நிலையத்தில் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த கண்ணன் என்பவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் நாங்கள் 10 பேர் வேலைக்கு சென்றோம் அங்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு குவைத்தில் பணியாளர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தோம் எங்களை மீட்டு தமிழக மறைத்து வந்த அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com