

வங்கக்கடலில் உருவாகிய டித்வா புயல் இலங்கையை அடித்து நொறுக்கிய கையோடு,தமிழகம் வந்தது. ஆனால் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையிலும் பெரும் மழை பொழிவு எதையும் தரவில்லை. ஆனால் இன்று சென்னை நகரத்துக்குள் நிலைகொண்ட மேகங்கள் பெரும் மழைப் பொழிவை தந்து வருகின்றன.
சென்னைக்கு அருகே ஏற்கனவே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக தென்மேற்கு திசையில் சுற்றி வந்த தாழ்வுமண்டலம் தற்போது வலுவிழந்தது, குறிப்பிடத்தக்கது. இது சென்னையிலிருந்து 40.கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னையின் புறநகர் பகுதியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.