ராமநாதபுரம் சம்பவத்தின் எதிரொலி: நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு!

ராமநாதபுரம் சம்பவத்தின் எதிரொலி: நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு!
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம்: கடந்த சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் நடந்த கொலை சம்பவத்தால், பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டதில், கடந்த ஜூன் 3ம் தேதியில், நடுவர் நீதிமன்றம் ஒன்றில், கையெழுத்திட வந்த கைதி அசோக் குமார் என்பவரை, நீதிபதியின் முன்பே, கொக்கி குமார் என்பவர் அரிவாளால் வெட்டியா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதன் எதிரொலியாக, தற்போது ராமநாதபுரத்தில், நீதிமன்றத்திற்கு வருபவர்களை பரிசோதித்த பின்பே உள்ள அனுமதிக்கின்றனர். நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இதுபோலவே, பரமக்குடியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, இன்று 4 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு வருபவர்களை உரிய முறையில் பரிசோதித்த பின்பே, நீதிமன்றத்தினுள் செல்ல அனுமதி அளிக்கப்படும். 

அதே போல், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், திருவாடனை, கமுதி, கடலாடி என அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் இன்று முதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பாதுகாப்பு தினமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com