திண்டிவனம் : முதலமைச்சரின் காலை உணவு திட்டம்...! பணிகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர்..!

திண்டிவனத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ள சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
திண்டிவனம் : முதலமைச்சரின் காலை உணவு திட்டம்...! பணிகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர்..!
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்த, அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் காலை உணவு திட்டத்திற்கு, உணவு  சமைப்பதற்காக பழைய நகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் முருங்கப்பாக்கம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் அவர்களுடன் அமர்ந்து கல்வித்தரத்தை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து யூனியன் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியை பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் அமீத், மாவட்டக் கல்வி அதிகாரி கிருஷ்ண பிரியா, திண்டிவனம் வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com