
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கடை மற்றும் அவரது உறவினர்கள், அவரோடு தொடர்பில் உள்ளவர்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்தவகையில், திருப்பத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் உறவினரான சேலம் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில், 14 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.