திருத்தணி அரசுப் பள்ளி சுவர் இடிந்தது எப்படி? ஆவேசத்துடன் அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன "அந்த" வார்த்தை!

உயிரிழந்த மாணவரின் சகோதரருக்குத் தேவையான அனைத்துக் கல்வி உதவிகளையும் அரசு முழுமையாக...
thiruthani school wall colapse
thiruthani school wall colapse
Published on
Updated on
1 min read

திருத்தணி: திருத்தணி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த சோகமான சம்பவம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

விபத்து நடந்தது எப்படி? அமைச்சர் விளக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "இந்தச் செய்தி ஒரு பேரிடி போல இறங்கியுள்ளது. முதலமைச்சர் அவர்கள் இது குறித்து மூன்று முறை என்னிடம் தொலைபேசியில் பேசி விவரங்களைக் கேட்டறிந்தார். விபத்து நடந்த அந்தப் பள்ளி 2014-2015 ஆம் ஆண்டுகளில் நபாட் (NABARD) நிதியுதவியுடன் கட்டப்பட்டது. அந்தப் பகுதியில் யாரும் செல்லக்கூடாது என்பதற்காகக் கட்டுமானப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்தப் பொருட்கள் அகற்றப்பட்டன.

பாதுகாப்பான இடம் என்று நினைத்து மாணவர்கள் அங்கு அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சுவர் இடிந்து விழுந்து இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்று விவரித்தார் 

யாராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளே

பள்ளியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், "பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால்தான் இது நடந்துள்ளது. இதில் யாருடைய அலட்சியம் இருந்தாலும், அவர்களைக் குற்றம் செய்தவர்களாகவே நான் கருதுகிறேன். ஏற்கனவே இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையான விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்

குடும்பத்திற்கு உதவி

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்குத் தமிழக முதலமைச்சர் அவர்கள் ₹3 இலட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். "என்னதான் பணம் கொடுத்தாலும் போன உயிர் திரும்பி வரப்போவதில்லை" என்று வேதனையுடன் குறிப்பிட்ட அமைச்சர், உயிரிழந்த மாணவரின் சகோதரருக்குத் தேவையான அனைத்துக் கல்வி உதவிகளையும் அரசு முழுமையாக ஏற்கும் என்றும், அந்தக் குடும்பத்திற்குப் பக்கபலமாக இருப்போம் என்றும் உறுதி அளித்தார்..

திருத்தணி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மாணவன் உயிரிழந்த இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கட்டிடங்களின் உறுதித்தன்மையை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com