TN Budget 2026: பள்ளிக் கல்விக்கு ₹44,527 கோடி, மருத்துவத்துக்கு ₹23,357 கோடி - எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு அரசு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.
TN Budget 2026
TN Budget 2026DIPR
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டின் 2026–27 பட்ஜெட் அறிக்கையில், நிதியமைச்சர் மரிய வில்சன் அரசு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களையும், அவற்றின் நோக்கம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் வாசித்து வருகிறார்.

தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்த்தெடுப்பதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு அரசு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

  • பள்ளிக்கல்வித் துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • உயர்கல்வித் துறைக்கு 8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு 17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • இளைஞர் நலன் மற்றும் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை 1,051 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • சமூகநீதித் துறைக்கு 3,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 9,818 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 23,357 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • கூட்டுறவுத் துறைக்கு 8,028 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு 4,880 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • எரிசக்தித் துறைக்கு 15,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறைக்கு 8,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 ரூபாய் ஒதுக்கீடு கோடி

  • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21,524 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • போக்குவரத்துத் துறைக்கு 13,561 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • நீர்வளத் துறைக்கு 9,264 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு

    1,762 கோடி ரூபாய் ஒதுக்கீடு

content will be updated shortly

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com