'வெற்றி பெற்ற காங்கிரஸ்!' - குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.. மேலூரைக் கைப்பற்றிய விஸ்வநாதன்

2,724 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றிபெற்றுள்ளார்.
மேலூரைக் கைப்பற்றிய விஸ்வநாதன்
மேலூரைக் கைப்பற்றிய விஸ்வநாதன் மேலூரைக் கைப்பற்றிய விஸ்வநாதன்
Published on
Updated on
1 min read

2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பல்வேறு இடங்களில் திமுகவை பின்னுக்குத்தள்ளி தவெக முன்னிலையில் உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தற்போது முதல் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.  2,724 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றிபெற்றுள்ளார்.

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 2,645 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். கடந்த தேர்தல்களில் அதாவது, 2011ம் ஆண்டு ஆர். சாமி, 2016 மற்றும் 2021 போன்ற ஆண்டுகளில் பெரியபுல்லன் என்கிற செல்வம். பி வெற்றி பெற்றார். மேலூர் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் பி.பெரியபுள்ளான் என்கிற செல்வம், தமிழக வெற்றிக் கழகத்தின் அ.மதுரைவீரன், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஆண், பெண் வாக்காளர்கள் உட்பட மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 2,39,856 ஆகும். இதில், தமிழ்நாட்டின் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பி.விஸ்வநாதன் 60,080 வாக்குகள் பெற்று, 57,356 வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளர் ஏ.மதுரைவீரனை விடக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் கடும் போட்டிக்கு 2,724 வாக்குகள் வித்தியாசத்தில் விஸ்வநாதனின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டது.

இந்த தேர்தல் சற்று கணிக்கமுடியாத பல்வேறு திருப்பங்களை கொண்டுள்ளதாகவே இருக்கிறது. தற்போது, தமிழகத்தில் முக்கியமான பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கிறது. அதாவது, 117 இடங்களில் தவெக-வும், 63 இடங்களில் திமுகவும், 53 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன. இந்த தேர்தலில் திமுக எதிர்கட்சியாக வரும் என்றும் தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com