ரேஸில் முந்தும் விஜய்! - அரியணையில் அமரபோகிறாரா? திமுகவை பின்னுக்குத்தள்ளி முன்னிலையில் தவெக!

பெரும்பான்மைக்கு சில எண்ணிக்கையிலான தொகுதிகளே வேண்டும் என்ற நிலைக்கு தவெக உள்ளது.
தவெக முன்னிலை
தவெக முன்னிலைதவெக முன்னிலை
Published on
Updated on
1 min read

தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. பரபரப்பான சற்றும் எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த தேர்தலில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. தற்போது வரை பல இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது. குறிப்பாக தவெக சதமடித்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி 52 இடங்களில் திமுக, 73 இடங்களில் அதிமுக, 109 இடங்களில் தவெகவும் முன்னிலை வகிக்கிறது.

தெண்மவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது. அதாவது, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஒட்டப்பிடாரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்,சங்கரன்கோவில், சோழவந்தான், மதுரை (வடக்கு), மதுரை (மத்தி), மதுரை (தெற்கு), மதுரை (மேற்கு), நத்தம், திண்டுக்கல், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, தேனி மாவட்டத்தின் பெரியகுளம், கம்பம், விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி, கிள்ளியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், ஆர். கே. நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், வேலூர், கே. வி. குப்பம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, அரக்கோணம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, செய்யாறு, போளூர், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, கோபி, காங்கேயம், அவிநாசி, திருப்பூர் (வடக்கு மற்றும் தெற்கு), பல்லடம், உடுமலை, சிங்காநல்லுர், கிணத்துக்கடவு, வால்பாறை, குளித்தலை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி (கிழக்கு மற்றும் மேற்கு), திருவெறும்பூர், முசிறி, துறையூர், பெரம்பலூர், விருத்தாச்சலம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, போன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு சில எண்ணிக்கையிலான தொகுதிகளே வேண்டும் என்ற நிலைக்கு தவெக உள்ளது.

தற்போது வரை 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுகவை பின்னுக்குத்தள்ளி முன்னிலையில் உள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அடுத்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிப்பார்களா? என்ற கேள்வி மக்களிடையே எழத்தொடங்கியுள்ளது. அதற்கான பதில் இன்னும் சில மணிநேரங்களில் வெளியாளிவிடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com