
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் நாளை முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறினார்.
மேலும் கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தமிழக அரசு போதை பொருட்கள் விற்பனையில் கண்டிப்புடன் செயல்படும் என்றும், குரங்கம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.