உச்சத்தை எட்டிய தக்காளி விலை...அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

உச்சத்தை எட்டிய தக்காளி விலை...அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Published on
Updated on
1 min read

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

தக்காளி வரத்து குறைந்ததால் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை ஜூன் மாத இறுதியில் 100 ரூபாய் என்ற அளவில் உச்சத்தை எட்டியது. 

அதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ஒரு கிலோ 90 ரூபாய் என்ற அளவிலும், சில்லறை விற்பனையில் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் என்ற அளவிலும் தக்காளி விற்பனையானது.

இந்நிலையில், இன்று மேலும் 10 ரூபாய் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும், சில்லறையில் விற்பனையில் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, விலையேற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பசுமைப் பண்ணைக் கடைகளில் வெளி சந்தையைவிட சற்று குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com