தென்காசியில் டன் கணக்கில் கொட்டப்படும் கேரள கழிவுகள்...! சுற்றுசூழல் ஆர்வலர்கள் காட்டம் ...!

தென்காசியில்  டன் கணக்கில் கொட்டப்படும் கேரள கழிவுகள்...!  சுற்றுசூழல்  ஆர்வலர்கள் காட்டம் ...!
Published on
Updated on
2 min read

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தடைசெய்யப்பட்ட கேரள கழிவுகளை கொண்டு வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது:  


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக இருப்பவர் கங்காதரன். இவர் நெட்டூரில் பணி முடித்து ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோவில் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு , ப்ளாஸ்டிக், தெர்மகோல் கழிவு உட்பட சுற்றுசூழலுக்கு கேடுகளை விளைவிக்கும்  கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து ஆலங்குளம் போலீசிற்கு தகவல் அளித்தார். ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் வந்த  போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் ஜோசன்ராஜ், இடைத்தரகர் முருகன் ஆகிய இருவரையும்  கைது செய்தனர். 

மேலும், இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக ஆலங்குளம் பகுதியில் சமீப காலமாக கேரளா கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்படுவதாகவும், இதனால் சுற்றுசூழல் பாதிப்படைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com