
கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரித்து வருகிறது.
இதனால், வெயிலின் தாக்கத்தை குறைக்க கொடைக்கானலை நோக்கி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது .
இதையும் படிக்க } அனைத்து மதத்தினரும் பயன்படும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ...!
இந்நிலையில், வரும் வாரத்தில் இன்னும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கொடைக்கானலில் நிலவி வரும் வாகன நெரிசலை குறைக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதலான போலீசார் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க } விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்...!