பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திடீர் மாற்றம்..! அதிரடி காட்டிய தமிழக அரசு..!

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திடீர் மாற்றம்..! அதிரடி காட்டிய தமிழக அரசு..!
Published on
Updated on
1 min read

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வணிக வரித்துறை முதன்மை செயலாளராக இருந்த தீரஜ் குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா மாற்றப்பட்டு புதிய செயலாளராக குமர குருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை செயலாளராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக சந்தீஷ் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com