
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் சேர்ந்த கவின் செல்வ கணேஷ்(வயது 27) என்ற ஐ.டி.ஊழியர் கடந்த 27-ந்தேதி சுர்ஜித் என்ற நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டியலினத்தை சேர்ந்த ஒரு நபர் (கவின்) தனது சகோதரியை காதலித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத சுர்ஜித் சாதிய வன்மத்தால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தில் ஈடுபட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் சாதி ரீதியிலான வன்முறைகள் தலைவிரித்து ஆடுகின்றது. மக்கள் சாதியத்தை தூக்கிப்பிடிக்கும் போக்கு தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இந்த புரையோடிய சாதிய மனநிலையை தோலுரித்து காட்டும் விதமான ஒரு எபிசோடை பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இறக்கியுள்ளனர் பிரபல யூடியூபர்களான கோபி - சுதாகர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது, இதில் ‘ஆணவப்படுகொலை, மிளகாய் தூளை போட்டு கொலை செய்வது, என சாதிய வாதிகளின் அட்டூழியங்களை அடித்து துவைத்திருந்தனர். மேலும் பல சமூக ஆர்வலர்கள் இவர்களின் தைரியமான முன்னெடுப்பை பாராட்டி வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் இந்த வீடியோக்களால் காண்டான ‘சாதி ஆணவக்காரர்கள்’ மூர்க்கத்தனமாக இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் தயாரிப்பாளர் சௌத்ரி என்பவர் நேற்று ஒரு விடியோ வெளியிட்டுள்ளார் அதில் , "யூடியூப் கோமாளிகள் கோபி, சுதாகர் நீங்கள் காமெடி விடியோக்கள் போடுங்கள், பல விஷயங்களை கிண்டல் செய்யுங்கள் அது எங்களுக்கு தேவையில்லை. சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட ஒரு விடியோ எங்கள் சமுதாயத்தை குற்றவாளிகளாக காண்பிக்கிறது. அரசியல் தலைவர்கள் இப்படி பேசினார்கள். அவர்களை அரசியல் ரீதியாக நாங்கள் கண்டிக்கிறோம்.உங்களை போன்ற கோமாளிகளுக்கு என்ன வேலை யூடியூப் நல்ல தளம். அதில் ஏராளமானோர் நல்ல விஷயங்களை சொல்கிறார்கள். ஆனால் உங்களை மாதிரி கோமாளிகள் இன்னொரு சமுதாயத்தை பற்றி தவறாக பேச யார் உங்களுக்கு எலும்பு துண்டுகள் போட்டது.
குரு பூஜையை பற்றி பேசுகிறீர்கள். அதுபற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நீங்கள் விடியோ போட வேண்டுமென்றால் வேறு விடியோ போடுங்க. சமூக பதற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். சுர்ஜித் பற்றி தான் நாங்கள் கவலை படுகிறோம். வாழ்க்கை இப்படி போய்விட்டதே என்பதை நினைத்துதான் எங்கள் சமூகம் வருத்தப்படுகிறது. சர்ச்சையாக போய்க்கொண்டிருக்கும் விஷயத்தை இப்படி அவர்கள் எடுத்து செய்வதை எப்படி காவல் துறை பார்த்துக்கொண்டிருக்கிறது" என கேள்வி எழுப்பி மிரட்டியிருந்தார்.
சர்ச்சையாக போய்க்கொண்டிருக்கும் விஷயத்தை இப்படி அவர்கள் எடுத்து செய்வதை எப்படி காவல் துறை பார்த்துக்கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பும் இவர் அநியாயமாக ஒரு இளைஞன் படுகொலை செய்யப்பட்டபோது எங்கே போய் ஒழிந்தார், இதெல்லாம் அப்பட்டமான சாதி வெறி, என நெட்டிசன்கள் இவரை கழுவி கழுவி ஊத்துகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.