சடலத்தின் மீது அமர்ந்து யாகம் நடத்திய திருச்சி அகோரி...

காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவிலில் காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.
சடலத்தின் மீது அமர்ந்து யாகம் நடத்திய திருச்சி அகோரி...
Published on
Updated on
1 min read

காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவிலில் காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்கழிமாத மண்டல பூஜைக்காக காசிக்கு சென்ற அகோரி மணிகண்டன் தன் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு, சக அகோரிகளுடன் நள்ளிரவில் கங்கைக்கரையில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து சிறப்பு யாகத்தில் ஈடுபட்டார். 

அப்போது அகோரி ஒருவர் நான் கடவுள் படத்தில் காண்பது போல தலைகீழாக நின்று பூஜை செய்தார். மேலும் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து, சங்கு முழங்கி பூஜையில் கலந்து கொண்டனர். இந்த யாகபூஜையான காளிக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜை எனவும், இதன் மூலம் இறந்தவரின் உடலுக்கு ஆன்மா சாந்தி அளிப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுவதாக அகோரிகள் கூறுகின்றனர்.

மேலும் இது போன்ற சடலத்தின் மீது அமர்ந்து யாகம் நடத்துவது என்பது அகோரிகள் காசியில் வழக்கமாக செய்யப்படும் பூஜைகளில்  ஒன்று என கூறுகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com