
பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரெனெ அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் செய்தியளர்களை சந்தித்தபோது, “அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் இணைவார்கள் என காத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இனிமேலும் காத்திருப்பது சரியல்ல. பாஜக கூட்டணியிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விலகுகிறது” என பேசியிருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் தற்போது டிடிவி தினகரனும் வெளியேறி உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவர் தற்போது இந்த விலகலை அறிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.