

கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே பிளக்ஸ் பேனர்களை வைத்து அட்டகாசம் செய்த தவெகவினரை தட்டி கேட்ட காவலரை கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தவெகவினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் நால்ரோடு, அதாவது தஞ்சாவூர் - மயிலாடுதுறை சாலையை இணைக்கும் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில், பேனர்களை குறுக்கே வைத்து தவெகவினர் அட்டகாசம் செய்துள்ளனர். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் வினோத் அவர்களுக்கு வேளாண் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விஸ்கியை வைக்கப்பட்ட பேனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவலர் தேவேந்திரன், அவர்களை கண்டித்து சாலையின் குறுக்கே வைத்திருந்த பேனரை அகற்ற முயன்ற முயன்றுள்ளார். அப்போது தவெக வார்டு உறுப்பினர்களான அருண் (21), காளி (30) இருவரும் தேவேந்திரனைகடுமையாக தாக்கியதில், அவருடைய வலது கையின் மணிக்கட்டு பகுதி எலும்பு முறிந்தது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அருண், காளி இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த தேவேந்திரனை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் காவலர் தேவேந்திரன்.
இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் தவெக வார்டு உறுப்பினர்கள் அருண் மற்றும் காளி வழக்கு பதிவு செய்து, இருவரையும் தேடிவந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான காளியை கைது செய்த நிலையில், மற்றொரு குற்றவாளி அருண் கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து இருவரையும் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கும்பகோணத்தில் எந்தவித அச்சமும் பயமும் இன்றி பணியில் இருந்த காவலரின் கையை தவெகவினர் உடைத்த சம்பவம் மற்ற காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.