"தவெக பணம் கொடுத்துதான் வெற்றிபெற்றதா?" சமூகவலைதளத்தில் பரவி வரும் வேட்பாளரின் 'சர்ச்சை வீடியோ!'

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு 2000 ரூபாய் வரை பணம் கொடுத்ததுதான் வெற்றிக்கு காரணம்.
TVK
TVKTVK
Published on
Updated on
1 min read

சேலம் மேற்கு தொகுதியில் ஓட்டிற்கு ரூ. 2000 ஓமலூர் தவெக வேட்பாளர் அதியமான் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேச்சு. பக்கத்துக்கு தொகுதியில் பணம் கொடுத்து நமது தொகுதியில் பணம் கொடுக்காமல் போனதால்தான் நாம் தோல்வி அடைந்துள்ளோம் என்றும் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அதியமான் அதிமுக வேட்பாளர் மணியிடம் 14,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதியமான், ஓமலூர் தொகுதியில் தவெக தோல்வி அடைந்ததற்கு சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு 2000 ரூபாய் வரை பணம் கொடுத்ததுதான் காரணம் என பேசியுள்ளார். மேலும் பக்கத்து தொகுதியில் தவெக வேட்பாளர் பணம் கொடுத்தது போல் தங்களுக்கும் பணம் கிடைக்கும் என எதிர்பார்த்த வாக்காளர்களுக்கு நாம் பணம் கொடுக்காததால் வாக்குகளை மாற்றி போட்டு விட்டதாகவும் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் இந்த தேர்தல் மிக முக்கியமானது என்றும் ஏனெனில் கடந்த எல்லா தேர்தல்களிலும் ஓட்டிற்கு இவ்வளவு பணம் கொடுத்தான் இதுவரை கட்சிகள் வெற்றிபெற்றதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேடைகளில் பேசியிருந்தார். ஆனால், இந்த தேர்தலில் அது மொத்தமாக மாறியுள்ளதாகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் தவெக வெற்றி பெற்றுள்ளதாகவும் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய நிலையில், தற்போது அதே கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் பணம் கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார் என மற்றொரு வேட்பாளர் பேசிய வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றதாக கூறப்படும் லட்சுமணன் சேலம் மேற்கில் 74 ஆயிரத்து 867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com