
அரசியல் பங்களிப்பை தடுப்பதற்காவே கொடியில் இடம்பெற்றுள்ள வர்ணங்களை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தவெக பொதுசெயலாளர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை அகற்ற கோரி பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்த வழக்கில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தவெக கொடியில் இடம்பெற்றுள்ள வர்ணங்கள் தொடர்பாக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பும் ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில், சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடி உருவாக்கி, பதிவுத்துறையில் கடந்த 2023 ம் ஆண்டு பதிவு செய்து, வர்த்தக முத்திரையாக பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்கள் அடங்கிய இந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபர்களும் கொடியில் சம்பந்தப்பட்ட வர்ணங்களை பயன்படுத்த முடியாது என மனுவில் தெரிlவிக்கப்பட்டுள்ளது..
அதனால் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்களை பயன்படுத்த தடை விதிக்கnnm வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தவெக கட்சி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சி பொதுசெயலாளர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தார்.அதில் தவெக கொடி தமிழர்களின் வரலாறு, சிந்தாந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது. வணிக நோக்கத்திற்காக தவெக கொடி உருவாக்கப்படவில்லை என்றும் தவெக கொடியில் உள்ள சிவப்பு ரத்தத்தின் நிறத்தை குறிப்பதாகவும், கொடியை அலகரிக்க மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பங்களிப்பை தடுப்பதற்காவே தவெக கொடியை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கொடிக்கும், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபால சபை கொடிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை
தவெக கொடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இரு தரப்பு வாதங்களுக்காக ஆகஸ்ட் 11ம் தேதிக்கு வழக்கினை தள்ளி வைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்