TVK: கேரளா முதல் மேற்கு வங்கம் வரை.. தவெக கிளைகள் உண்மை இல்லையா.. அதிகாரப்பூர்வ மறுப்புக்கு பின்னணி என்ன?

கேரள நடிகர் தேவன், தவெகவில் இருந்து சிலர் தன்னிடம் பேசியதாகவும், கேரள தவெகவில் இணைய அழைத்ததாகவும் கூறியிருந்தார்.
TVK Expansion
"யாரும் நம்பாதீங்க.." கேரளா, மேற்கு வங்கத்தில் 'TVK கிளைகள்' உள்ளதா - உண்மை என்ன?AL Generated
Published on: 
Updated on: 
2 min read

தமிழக வெற்றிக் கழகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு பெரும் அலையாய் எழுந்து, யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. அந்த அலை தமிழகத்துடன் நிற்காமல், அண்டை மாநிலங்களுக்கும் பரவியது.

கேரளா, ஆந்திரா மற்றும் சில வட மாநிலங்களிலும் விஜய்க்கு கணிசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் அவர் கட்சியை விரிவுபடுத்துவார் என்று பரவலாகப் பேச்சு எழுந்தது.

கேரள தவெக

விஜய் பதவியேற்பு கேரளாவில் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அந்த மாநிலத்திலும் கட்சி தொடங்குவதில் ஆர்வம் காட்டினர். கேரளா டிவிகே தொடங்கப்பட்டு, ரசிகர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். விஜய்க்கு ஆதரவான மலையாள கோஷங்கள் எழுப்பப்பட்டன. ‘My TVK’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, வயநாடு மற்றும் பாலக்காட்டில் அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.

வட இந்தியாவில் 'விஜய் தளபதி' அலை

இதேபோல வட இந்தியாவிலும் விஜய் அலை எழுந்தது. ஒரே மாதிரியாக வட இந்தியர்கள் விஜய் மற்றும் தவெக அரசின் சாதனைகளைப் புகழத் தொடங்கினர். பெரும்பாலும் தவறான தகவல்கள் மற்றும் பொய்களால் நிரம்பிய 'விஜய் தளபதி' புகழ்பாடும் வீடியோக்கள் பரவியது, தவெக முகாமின் திட்டமிட்ட நகர்வாக இருக்கலாம் எனப் பார்க்கப்பட்டது.

மேற்கு வங்க தவெக கிளைத் தொடக்கம்

சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்படுவதாக ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த மாநிலத்தின் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பகுபூர் பகுதியில் தவெகவின் முதல் அலுவலகம் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதன் மாநில நிர்வாகிகளாக மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜய்.டி ஆகியோர் நியமிக்கப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

சைத்தாலி ராய், ஆஜ் தாக் ஊடகத்தில் பேசியபோது, தமிழகத் தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியை அமைத்துள்ளதாகவும், முதலில் சமூக சேவைகளில் ஈடுபட்டு, சமூக ஊடகங்களில் பரவலாக செயல்படவும், பின்னர் தலைமை விரும்பும் தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் அகில இந்திய அளவில் தன்னை விரிவுபடுத்துவதில் ஆர்வமாக இருப்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம் இல்லை.

தவெக அமைச்சர்களே விஜய் பிரதமராக வருவார் எனப் பேசி வந்தனர். இது காங்கிரஸ் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, வார்த்தைகள் தடிக்கத் தொடங்கியதும் நிறுத்தப்பட்டது.

கேரள நடிகர் தேவன், தவெகவில் இருந்து சிலர் தன்னிடம் பேசியதாகவும், கேரள தவெகவில் இணைய அழைத்ததாகவும் கூறியிருந்தார். இதைத் தவெக தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை. ஆனால், இப்போது தமிழக வெற்றிக் கழகம் அதன் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்புப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி இதற்கு முரணாக அமைந்துள்ளது.

TVK Fact Check

TVK Fact Check என்ற எக்ஸ் பக்கம் வெளியிட்ட பதிவில், "தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தமிழ்நாடு பாண்டிச்சேரி தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை.

சமூக வலைதளங்களில் பரவி வரும் இதுதொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனக் கூறப்பட்டுள்ளது.

கேரள தவெக ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அது தமிழக வெற்றிக் கழகத்தால் அல்லாமல், விஜய் ரசிகர்களால் முதலில் உருவானது. நடிகர் தேவனிடம் பேச்சுவார்கதை நடந்திருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

TVK Expansion
விஜய்யின் ஜோசியர் முதல் RTI வரை: தவெக அரசு 'U-டர்ன்' அடித்த 8 அறிவிப்புகள்.. என்ன காரணம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com